இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் "மன்மதன் அம்பு' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கிறார். இதற்கான நடிப்பு பயிற்ச்சியில் கமல், மாதவன் மற்றும் சங்கீதாவுடன் கடந்த மாதம் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாள்களாக மும்பையில் தங்கியிருந்த திரிஷா, அங்கு ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.
கிளாமராக அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் ஹிந்தி சினிமாவுக்கு மட்டும்தானாம். இதையடுத்து "மன்மதன் அம்பு' படத்துக்காக 45 நாள்கள் ஐரோப்பா செல்ல இருப்பதால், அதற்கு முன்பே "கட்டா மிட்டா' படத்துக்காக மும்பை பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியும் கொடுத்து விட்டு சென்னை வந்து ஓய்வு எடுத்து வருகிறார் திரிஷா.
No comments:
Post a Comment