சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில், மாநகராட்சி சார்பில் ரூ. ஒன்றரை கோடி செலவில் மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.
தென்சென்னையிலேயே மிகப் பெரிய மருத்துவமனையாக இது அமையும் என மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்பேட்டையில், சென்னை மாநகராட்சி சார்பில் முதல் முறையாக அனைத்து வசதிகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது. இதற்கு மேயர் மா.சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆழ்வார்பேட்டையில் கடந்த 15 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த சுமார் 5 கிரவுண்டில் 2 கிரவுண்டு நிலத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனை கட்டப்படுகிறது.
இம் மருத்துவமனை ரூ.1 கோடியே 21 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. இது இ.சி.ஜி., எக்ஸ்ரே, காத்திருப்பு அறை, பரிசோதனை கூடம், லிப்ட் உள்ளட்ட அனைத்து வசதிகளும் கொண்டது.
10 மாதத்தில் கட்டி முடிக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனை தான் தென்சென்னையில் அமையும் மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். இதன் மூலம் இப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என்று கூறினார்.
நன்றி : தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment