விளம்பர வர்த்தக ஒப்பந்தத்தில் சச்சின் டெண்டுல்கரையும் விஞ்சி விட்டார் இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி. தற்போது விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் தோனியை ரூ.200 கோடிக்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
தோனியின் விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த நிறுவனம் இனி தோனிக்காக நிர்வாகம் செய்யும்.
அதாவது தோனியின் அனைத்து விளம்பர ஒப்பந்தங்கள் அனைத்தையும் மேலாண்மை செய்யும் என்று ரித்தி விளையாட்டு நிர்வாக நிறுவன பொது மேலாளர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இரண்டாண்டு கால ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 180 கோடிக்கு ஐகனாக்ஸ் என்ற நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ரித்தி நிறுவனம் ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங் ஆகியோருடன் சிறிய அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அறிக்கையின் படி உலகிலேயே அதிக பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் தோனி என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டினார். இதில் 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விளம்பரம் மூலம் வருவது என்பதையும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment