இரண்டு வருடமாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.
படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது. படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் பிரியா விடை பெற்றனர்.
அப்போது ஐஸ்வர்யாராய் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி காலில் விழுந்து வணங்கினார். தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.ஐஸ்வர்யாராய் செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஐஸ்வர்யாராயை ஆசீர்வதித்தார். நீயும் எனக்கு மருமகள் போல்தான் என்று சொல்லி வாழ்த்து கூறினார்.
ஐஸ்வர்யாராய் பணிவை பார்த்து படப்பிடிப்பு குழு வினர் வியந்தார்கள்.எந்திரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும் என்று ரஜினி நிருபர்களிடம் தெரிவித்தார். தற்போது இப்படத்துக்கான இசை கோர்ப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இம்மாதம் இறுதியில் பாடல் சி.டி. வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்தலாமா என்றும் யோசனை நடக்கிறது.
ரஜினி இப்படத்தில் ரோபோ, விஞ்ஞானி என இருவேடத்தில் நடிக்கிறார். விஞ்ஞானி ரஜினி தன்னை போன்ற உருவத்துடன் “ரோபோ” ஒன்றை உருவாக்குவதும் அந்த ரோபோ ஐஸ்வர்யாராயை காதலிப்பதும் அதனிடம் இருந்து ஐஸ்வர்யாராயை மீட்க விஞ்ஞானி போராடுவதுமாக காட்சிகள் தொகுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவின் பல மாநிலங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளன.





1 comment:
தீபாவளி ரிலீஸ்னு கேள்விபட்டேனே முன்பு, நிஜமாகவா சொல்றிங்க அடுத்தமாசம் ரிலீஸ்னு?
Post a Comment