சிவகுமார் குடும்பத்தினரின் சிறந்த மாணவர்களுக்கு பரிசும் உதவித் தொகையும் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய சூர்யா ஒவ்வொரு வருடமும் கல்விக்காக செலவிடப்படும் பணம் உயர்ந்து கொண்டே வருவதாக தெரிவித்தார்.
இந்த வருடம் அவர்கள் வழங்கிய தொகை ஏறக்குறைய ஐம்பது லட்சமாம். ஈழ தமிழர்களின் படிப்புக்கு உதவுவதாக இந்த நிகழ்ச்சியின் போது சூர்யா தெரிவித்தார். இதே சூர்யா பெங்களூர் மிரர் இணையதளத்துக்கு அளித்த பேட்டி வேறு மாதிரி இருந்தது.
ரத்த சரித்திரம் படத்தில் விவேக் ஓபராய் நடித்திருப்பதால் படம் தென்னிந்தியாவில் வெளியாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ஈழப் பிரச்சினை ஏற்கனவே முடிந்து போன ஒன்று.
கொழும்பு சென்ற நடிகர்கள் வெறும் கேளிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை சமூக சேவையும் செய்தனர் என்று தெரிவித்திருந்தார். முடிந்து போன ஈழப் பிரச்சினை குறித்து சூர்யா மிக உருக்கமாக பேசியது நிஜமாகவே ஆச்சரியம்தான்.
நன்றி : இசை தமிழ்
No comments:
Post a Comment