ராஞ்சி: இந்திய கேப்டன் தோனி, அவரது பள்ளி தோழியை கைப்பிடிக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி(28). இவரது பள்ளி தோழி சாக்ஷி சிங் ராவத். மிக நீண்ட கால நண்பர்களான இவர்கள், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். தற்போது இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவியாக உள்ளார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் டேஹ்ராடூனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எளிமையாக நடந்தது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தோனியின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இது குறித்து இவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில்,""இரு குடும்பத்தினர் இடையே நல்ல பழக்கம் உள்ளது. இருவரது தந்தையும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தனர். திருமணத்திற்கான நாள் இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. வரும் அக்டோபரில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பின் திருமணம் நடக்கலாம்,''என்றார்.
No comments:
Post a Comment