Pages

Sunday, July 4, 2010

அரைஇறுதியில் ஜெர்மனி,ஸ்பெயின்: சோகத்துடன் வெளியேறியது பராகுவே, ஆர்ஜென்டீனா

கேப்டவுன், ஜூலை 3: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.


ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ் அபாரமாக ஆடி இரு கோல்கள் அடித்து ஜெர்மனியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த உலகக் கோப்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ஜென்டீனா-ஜெர்மனியின் காலிறுதி ஆட்டம் தான் பலம் வாய்ந்த அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டமாக அமைந்தது.


கடந்த ஆட்டங்களில் கோலோச்சி வந்த ஆர்ஜென்டீனாவால் ஜெர்மனி வீரர்களின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை. ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே அதிரடியாக கோல் அடித்து ஆர்ஜென்டீனாவிற்கு அதிர்ச்சியளித்தார் ஜெர்மனியின் தாமஸ் முல்லர்.


இதன்பிறகு ஆர்ஜென்டீனா வீரர்கள் கடுமையாகப் போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனி வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஜெர்மனியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மிரோஸ்லேவ் க்ளோஸ் ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.


அடுத்த 6-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் கோல் கிடைத்தது. இந்த கோலை அந்த அணியின் பிரைடுரிச் போட்டார். ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார் க்ளோஸ். இறுதியில் ஜெர்மனி 4-0 என்ற கணக்கில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து போட்டியிலிருந்து வெளியேற்றியது.


இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஆர்ஜென்டீனாவும் கருதப்பட்டது. ஆனால் ஆர்ஜென்டீனா தற்போது போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதால் ஜெர்மனிக்கு கோப்பை கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

போராடி வென்றது ஸ்பெயின் ( 1 - 0) : வெளியேறியது பராகுவே

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடந்த பராகுவேக்கு எதிரான காலிறுதியில், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. தவிர, சுமார் 60 ஆண்டுகளுக்கு பின், ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. கடைசிவரை போராடிய பராகுவே, சோகத்துடன் வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் நடக்கும் <உலக கோப்பை கால்பந்து தொடரின் கடைசி காலிறுதி போட்டி, இன்று நடந்தது. இதில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், 31வது இடத்திலுள்ள பராகுவே அணியை சந்தித்தது.


போட்டியின் முதல் நிமிடத்தில் இருந்தே ஸ்பெயின் அணியினர் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பெரும்பாலும் பந்து, இந்த அணியினர் வசமே இருந்து வந்தது. 41வது நிமிடத்தில் கார்டஜோ, பராகுவே அணிக்கு முதல் கோல் அடித்தார். ஆனால் இது நடுவரால் "ஆப்-சைடு' கோல் என அறிவிக்கப்பட, முதல் பாதி கோல் எதுவுமின்றி சமமாக (0-0) முடிந்தது.



இரண்டாவது பாதியில், 57வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஜெரார்டு பிக்யூ, பராகுவே வீரர் கார்டஜோவை, கையை பிடித்து இழுக்க, நடுவர் "எல்லோ கார்டு' கொடுத்து எச்சரித்தார். தவிர, பராகுவேக்கு "பெனால்டி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கார்டஜோ அடித்த இந்த பந்தை, ஸ்பெயின் கோல் கீப்பர் இகர் கேசில்லாஸ் அருமையாக தடுக்க, "சூப்பர்' வாய்ப்பு கைவிட்டு போனது.



 அடுத்த சில நிமிடத்தில் அல்காரஸ், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை பிடித்து தள்ளிவிட்டு, "எல்லோ கார்டு' பெற்றார். இதற்காக ஸ்பெயினுக்கு "பெனால்டி-கிக்' கிடைத்தது. இதை அலோன்ஸ்கா கோலாக மாற்றினார். ஆனால் சரியான இடத்தில் வைத்து பந்தை அடிக்கவில்லை என நடுவர் மறுத்து, மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இம்முறை சுதாரித்த பராகுவே கோல் கீப்பர் வில்லர், அலோன்ஸ்கா சொதப்பலாக அடித்த பந்தை அருமையாக தடுத்துவிட்டார்.



போட்டியின் 83வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெட்ரா, தனக்கு கிடைத்த வாய்ப்பில், பராகுவேயின் கோல் பகுதிக்குள் அடித்தார். ஆனால் பந்து கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது. அப்போது அங்கிருந்த டேவிட் வில்லா, மீண்டும் திருப்பி அடித்தார். ஆனால் இம்முறை பந்து கோல் போஸ்ட்டில் பட்டு, கோலாக மாற, ஸ்பெயின் முன்னிலை பெற்றது. இது டேவிட் வில்லா இத்தொடரில் அடித்த ஐந்தாவது கோல் ஆகும்.


இதை சமன்செய்ய, பராகுவே வீரர்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. ஆட்டநேர ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment