புதுடில்லி: தோனி-சாக்ஷி திருமணம் அவசர அவசரமாக நடத்தப்பட்டதற்கு, ஜோதிதிடர்கள் வழங்கிய ஆலோசனை தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி. இவர் தனது பள்ளிப் பருவ தோழியான சாக்ஷி சிங் ராவத்தை நேற்று முன் தினம் திருமணம் செய்து கொண்டார்.
உத்தரகாண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இதில் ஹர்பஜன் சிங், நெஹ்ரா, ரெய்னா, ஆர்.பி.சிங், ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் பங்கேற்றனர். பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகரும் கலந்து கொண்டார்.
சச்சின் வாழ்த்து:
திடீரென்று நடந்த தோனியின் திருமண நிகழ்ச்சியில், சச்சின், சேவக் உள்ளிட்ட இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்க வில்லை. இந்நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை காண, லண்டன் சென்றுள்ள சச்சின், தனது "டுவிட்டர்' இணையதளத்தில் புதுமண தம்பதிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீரர் யுவராஜ் சிங்கும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" தோனி, சாக்ஷி இருவருக்கும் சிறப்பான வாழ்க்கை அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
No comments:
Post a Comment