Pages

Monday, July 19, 2010

அண்ணா பல்கலை உருவாக்கிய ஆன்-லைன் தமிழ் ‘அகராதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், ‘அகராதி’ என்ற ஆன்-லைன் தமிழ் டிக்சனரி உருவாக்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், ‘அகராதி’    (http://www.agaraadhi.com/Agaraadhi/) என்ற ஆன்-லைன் தமிழ் டிக்சனரி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வார்த்தையின் அர்த்தம், உபயோகம், இணையதள பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்.


இந்த ஆன்-லைன் தமிழ் டிக்சனரியை அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் மையத்தின் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், சரக்கோ என்ற தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஐ.டி., வளாகத்திலுள்ள ஏ.யு.,- கே.பி.சி., ஆராய்ச்சி மையம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

இதில் தமிழ் மொழியில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் தமிழ் மொழியில் தேடல் இயந்திர வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது.இவ்வாறு மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
Blog Widget by LinkWithin

1 comment:

Ramesh said...

URL சரியாக இணைக்கப்படவில்லை நண்பா
தகவலுக்கு நன்றி

Post a Comment