Pages

Thursday, July 8, 2010

ராஞ்சியில் தோனிக்கு உற்சாக வரவேற்பு மற்றும் திருமண படங்கள்

ராஞ்சி: தோனி-சாக்ஷி புதுமண தம்பதிக்கு சொந்த ஊரான ராஞ்சியில், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி(28). இவரது பள்ளி தோழி சாக்ஷி சிங் ராவத்(23). இவர்களது திருமணம் உத்தரகண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக நடந்தது. அவசரமாக திருமணம் முடித்து கொண்டதற்கு ஜோதிடர்கள் கூறிய ஆலோசனையே காரணம் என கூறப்பட்டது.


ராஞ்சி வருகை:


திருமணம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின் தோனி, சாக்ஷி ஜோடி நேற்று காலை சொந்த ஊரான ராஞ்சி திரும்பியது. நேற்று தோனி தனது 29 வது பிறந்த நாளை கொண்டாடினார். 


தோனிக்கு திருமண மற்றும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ராஞ்சி விமானநிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால், வழக்கம் போல மீடியாவை புறக்கணித்த தோனி, காரில் வெளியேறினார். இதனால் மீடியா உட்பட பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.



பிறந்தநாள்:


ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டருகே அவரது ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதல் காத்திருந்தனர். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு "கேக்' வெட்டிக் கொண்டினர். தனது வீட்டின் பால்கனியில் மனைவி சாக்ஷியுடன் இணைந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் தோனி. 


இது குறித்து தோனியின் தீவிர ரசிகரான அடுல் என்பவர் கூறுகையில்,"" இன்று எங்களுக்கு இரட்டை மகிழ்ச்சி. நான்கு நாட்களுக்கு முன் தோனி திருமணம் செய்து கொண்டார். இன்று அவரது பிறந்த நாள். இரண்டையும் சேர்த்து கொண்டாடுகிறோம்,'' என்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment