போன் நிறுவனமான வோடபோனின் விளம்பர மாடல்களான ஜூஜூக்கள் மிக பிரபலம். இப்போது அவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு விளம்பரங்களில் கிளி புகுந்துள்ளது.
முட்டை வடிவ பெரிய மண்டை. குச்சி குச்சி கை, கால்கள். பெரிய வயிறு. வேற்றுகிரக மனிதன் போல வெள்ளை நிறத்தில் கூட்டமாக கலக்கியது ஜூஜூ என்ற குள்ள மனிதர்கள். வோடபோன் நிறுவன விளம்பரங்களில் வந்த இவர்கள் உலகம் முழுவதும் பிரபலம்.
இப்போது அவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு கிளியை விளம்பரத்தில் பயன்படுத்துகிறது வோடபோன்.
இதுபற்றி அந்நிறுவன விளம்பரங்களை கையாளும் ஆகில்வி அண்ட் மாதெர் நிறுவன இயக்குனர் ராஜிவ் ராவ் கூறுகையில், ‘‘ஜூஜூக்களை அதிக வேலை வாங்க விரும்பவில்லை. இப்போது விளம்பரத்தில் அனிமேஷன் கிளி கலக்குகிறது. அதற்கு நடிகர் போமன் இரானி குரல் கொடுத்துள்ளார்’’ என்றார்.


No comments:
Post a Comment