Pages

Thursday, July 22, 2010

சாம்பியன்ஸ் லீக் சென்னை அணியில் பிளிண்டாஃப்

தேன் ஆப்பிரிக்காவில் நடைபெறும் இரண்டாவது சாம்பியன் லீக் சர்வதேச உள்நாட்டு கிளப் அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் தொடரினல் ஐ.பி.எல். சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் இடம்பெற்றுள்ளார்.


செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டித் தொடருக்கு 3 ஐ.பி.எல். அணிகள் உட்பட இதுவரை 8 அணிகள் உறுதியாகியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், செண்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் (நியூஸீலாந்து), ஹைவெல்ட் லயன்ஸ் (தெ.ஆ.), ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு. தெற்கு ஆஸ்ட்ரேலிய ரெட்பேக்ஸ், ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியா புஷ் ரேஞ்சர்ஸ், வாரியர்ஸ் (தெ.ஆ.) ஆகிய அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து வயம்பா அணியும், மேற்கிந்திய உள்நாட்டு T20 கிர்க்கெட் சாம்பியன் அணி ஆகியவை இதில் பங்கேற்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ்.தோனி, பத்ரிநாத், முரளி விஜய், ரெய்னா, பார்த்திவ் படேல், அஷ்வின், ஜகதி, சுதீப் தியாகி, அனிருதா, எல்.பாலாஜி, முரளிதரன், மைக் ஹஸ்ஸி, ஆல்பி மோர்கெல், திலன் துஷரா, திசரா பெரெரா, டக் போலிஞ்சர், மேத்யூ ஹெய்டன், பிளிண்டாஃப், ஜொகிந்தர் ஷர்மா, அபினவ் முகுந்த்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment