கால்லே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் பிராக்யன் ஓஜாவை வீழ்த்தி தனது வாழ்நாள் சாதனையான 800 விக்கெட்டுகள் இலக்கை எட்டினார்.
இந்தியா தன் இரண்டாவது இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
முரளிதரன் 800வது விக்கெட்வீடியோ
முரளிதரனுக்கு கடைசி விக்கெட்டை வீழ்த்த இஷாந்த் ஷர்மா, மிதுன், லஷ்மண், ஓஜா ஆகியோர் முட்டுக்கட்டையாகத் திகழ்ந்தனர்.
ஓரிரு முறை மற்ற வீச்சாளர்களுக்கும் கடைசி விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு ஏற்பட்டது. ரன் அவுட் வாய்ப்புகளும் ஏற்பட்டது. ஆனால் அதிலெல்லாம் விக்கெட் விழவில்லை.
கடைசியாக ஒரு முறை தனது வேகமாகத் திரும்பும் ஆஃப் ஸ்பின் பந்தை முரளி வீச அதனை முன்னே வந்து தொட்டார் ஓஜா, அது விளிம்பில் பட்டு மகேலா ஜெயவர்தனேயிடம் கேட்ச் ஆனது.
133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார் முரளி. 67வது முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முரளி.
இந்திய அணியில் லஷ்மண் அபாரமாக விளையாடி 69 ரன்களை எடுத்து நூலிழையில் ரன் அவுட் ஆனார்.
ஆனால் இஷாந்த் ஷர்மா, சச்சின் டெண்டுல்கரின் மனோநிலையில் விளையாடினார் என்றே கூறவேண்டும். 106 பந்துகளை தைரியமாக எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து முரளிக்கு விக்கெட் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பினார்.
95 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை 96 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.






No comments:
Post a Comment