Pages

Saturday, July 10, 2010

ஜெயிக்கப் போவது யாரு? ஆக்டோபஸின் கணிப்பா, கிளியின் ஆரூடமா?

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெயிக்கப்போவது ஸ்பெயினா, நெதர்லாந்து அணியா? என்பதை விட ஜெர்மனியின் ஆக்டோபஸ் பாலா, சிங்கப்பூர் கிளி மணியா? என்பதே கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


ஸ்பெயின் சாம்பியன்


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வெல்லும், ஜெர்மனி உருகுவேயை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடிக்கும் என ஆக்டோபஸ் பால் கணித்துள்ளது.

ஜெர்மனியின் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ள ஆக்டோபஸ் பால் இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி விளையாடும் போட்டிகளை கணித்து வந்தது. அது கூறியதைப் போலவே தொடர்ந்து வெற்றிபெற்ற ஜெர்மனி, அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்று ஆக்டோபஸ் கணித்துள்ளது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் உருகுவேயை வீழ்த்தி ஜெர்மனி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று ஆக்டோபஸ் கணித்துள்ளது.

நெதர்லாந்துக்கே கோப்பை: சிங்கப்பூர் கிளி ஆரூடம்

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஜோதிடர் முனியப்பனின் கிளி மணி, நெதர்லாந்து அணியே கோப்பையை வெல்லும் என்று ஆரூடம் கூறியுள்ளது."இதுவரை எனது கிளியின் ஆருடம் பொய்யானதில்லை.

இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லும்' என்கிறார் முனியப்பன். ஜெயிக்கப் போவது யாரு? ஜெர்மனியின் ஆக்டோபஸ் பாலா, சிங்கப்பூர் கிளி மணியா? ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment