Pages

Friday, September 17, 2010

மும்பை அணி அதிரடி வெற்றி

டர்பன்: சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' போட்டியில் மும்பை அணி, கயானா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங்கில் மும்பை அணியின் போலார்டு அதிரடி காட்டினார். பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய கயானா அணி மீண்டும் தோல்வி அடைந்து ஏமாற்றியது.


தென் ஆப்ரிக்காவில், 2வது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று டர்பனில் நடந்த தொடரின் 10வது லீக் போட்டியில், "பி' பிரிவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் (இந்தியா), கயானா (வெஸ்ட் இண்டீஸ்) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின், பேட்டிங் தேர்வு செய்தார்.

சூப்பர் துவக்கம்:


முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு சச்சின், ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த போது, சச்சின் (48) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஷிகர் தவான் (39) நம்பிக்கை அளித்தார்.

போலார்டு அதிரடி:


பின்னர் களமிறங்கிய போலார்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கயானா பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர் சிக்சர் மழை பொழிந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சவுரவ் திவாரி "டக்-அவுட்' ஆனார். அடுத்து வந்த அம்பாதி ராயுடு (4) நிலைக்கவில்லை. மறுமுனையில் அதிரடி காட்டிய போலார்டு, 26 பந்தில் அரைசதமடித்தார். மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. 30 போலார்டு (72 ரன், 9 சிக்சர்), டுமினி (14) அவுட்டாகாமல் இருந்தனர். கயானா அணி சார்பில் பி÷ஷா 3, கிரான்டன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சர்வான் ஆறுதல்:


கடின இலக்கை விரட்டிய கயானா அணிக்கு சாட்டர்கூன் (1), டவ்லின் (7) சுமாரான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த டியோனரின் (27) ஆறுதல் அளித்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய சர்வான் (46) அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த பார்ன்வெல் (24) ஓரளவு கைகொடுத்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற கயானா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

மும்பை அணி சார்பில் பிராவோ, ஹர்பஜன் தலா 2, ஜாகிர், மலிங்கா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக 30 பந்தில் 9 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 72 ரன்கள் எடுத்த போலார்டு தேர்வு செய்யப்பட்டார்.

போலார்டு அபாரம்


மும்பை அணியின் போலார்டு, கயானா அணிக்கு எதிராக 30 பந்தில் 9 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 72 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' அரங்கில் ஒரு இன்னிங்சில் (போட்டியில்) அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக வயம்பா அணிக்கு எதிராக 6 சிக்சர் அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா இருந்தார்.


புள்ளிப்பட்டியல்

பிரிவு "ஏ'

அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
சென்னை 2 2 0 4 +3.850
வாரியர்ஸ் 2 2 0 4 +1.116
விக்டோரியா 2 1 1 0 -0.613
சென்டிரல் 2 0 2 0 -1.517
வயம்பா 2 0 2 0 -2.887

பிரிவு "பி'

தெற்கு ஆஸி., 2 2 0 4 +0.439
பெங்களூரு 1 1 0 2 +3.445
மும்பை 3 1 2 2 +0.260
லயன்ஸ் 2 1 1 2 -0.050
கயானா 2 0 2 0 -2.569
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment