ஹாலிவுட்டின் பிரமாண்ட ஸ்டுடியோ, ஸ்டேன் விஸ்டம் ஸ்டுடியோஸ் (Stan Wisdom Studios). ஜுராஸிக்பார்க், பிரிடேட்டர் போன்ற பிரமாண்ட படங்களில் பயன்படுத்தப்பட்ட அனிமேட்ரானிக்ஸ் டெக்னாலஜி இங்கு மட்டுமே உள்ளது.
இந்த டெக்னாலஜியை பயன்படுத்தியே டைனசர்ஸை படத்தில் உலவவிட்டிருந்தார்கள். சரியாகச் சொல்வதென்றால் டைனசர்ஸ் பிறந்த இடம் இது. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் வேலைகளும் இங்குதான் மேற்கொள்ளப்பட்டன.
ஏந்திரன் படத்தில் வரும் ரோபோ ரஜினியின் மாடலையும் இங்குதான் உருவாக்கியிருக்கிறார்கள். அதற்காக 2008 ஜூலையில் ரஜினி மற்றும் தனது டீமுடன் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இந்த ஸ்டுடியோவுக்கு வருகை தந்திருக்கிறார் ஷங்கர். அப்போது ரஜினியை வைத்து ரோபோ ரஜினிக்கான மாடலை உருவாக்கும் பணியை தொடங்கியிருக்கிறார்கள். மேக்கப் டெஸ்டும் எடுக்கப்பட்டிருக்கிறது.
சுமார் ஒன்றரை வருடங்கள் இந்த ஸ்டுடியோவில் உள்ளவர்கள் ரோபோ ரஜினிக்காக உழைத்திருக்கிறார்கள். பிறகு சென்னை வந்து சன் ஸ்டுடியோவில் நான்கு மாதங்கள் இறுதிகட்ட வேலைகளை பார்த்திருக்கிறார்கள். மொத்தம் 22 காட்சிகளில் அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த தொழில்நுட்பத்தின் அனைத்து சாத்தியக் கூறுகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு எந்திரன் படத்தில் இருந்ததாகவும், ஹாலிவுட் படங்களில்கூட இப்படி அமைவது அபூர்வம் எனவும் பாராட்டியிருக்கிறார்கள் ஸ்டேன் விஸ்டம் ஸ்டுடியோவைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஸ்டுடியோ வேலை செய்திருக்கும் முதல் இந்திய திரைப்படம் எந்திரன் என்பதையும் பெருமையுடன் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஷங்கர்.

No comments:
Post a Comment