Pages

Saturday, September 18, 2010

'எந்திரன்' : அக்டோபர் 1 முதல் உலகமெங்கும் ரிலீஸ்

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகம் முழுவதும் ஒரே நாளில் எந்திரன் திரைப்படம் வெளியாகிறது.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் எந்திரன்.


இத்தனை நாடுகளில் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையையும் எந்திரன் பெறுகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘எந்திரன்’. 

இதன் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. அதையடுத்து மும்பையில் அதன் இந்தி பதிப்பான ‘ரோபோ’ பாடல்கள் வெளியிடப்பட்டன.ஐதராபாத்தில் தெலுங்கு ‘ரோபோ’ பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. அடுத்த சிறப்பம்சமாக ‘எந்திரன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது.

பாடல்களும் டிரெய்லரும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் எந்திரன் ரிலீஸ் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.அக்டோபர் 1ம் தேதி வெள்ளியன்று படம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment