Pages

Monday, September 27, 2010

மச்சுபிச்சு மலையில் கிளிமஞ்சாரோ வீடியோ பாடல் பற்றி ரஜினி

முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்... முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர்



என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட் டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும்&அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிரலாம்னு 20, 30 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன்.

அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க... அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க. மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க. நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. 

ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க... சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது.

என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. 

நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க. முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே எல்லாரும் கை தட்டி னாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா மாதிரி இருந்தாங்க. அந்த உடம்புலயே ரிதம் இருக்கு. 

 கிளிமஞ்சாரோ வீடியோ பாடல்



அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந் தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டு அப்படியே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க. 
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment