Pages

Saturday, June 12, 2010

விளையாட்டு டி20: இந்தியா-ஜிம்பாப்வே இன்று மோதல்

ஹராரே (ஜிம்பாப்வே), ஜூன் 11: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் ஹராரேயில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் இரு டி20 ஆட்டங்களில் விளையாடுகின்றன.

÷ஏற்கெனவே முத்தரப்புத் தொடரின் லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. இதனால் டி20 தொடரில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு ரெய்னா தலைமையிலான இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

÷லீக் ஆட்டங்களில் ஜிம்பாப்வேயிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இந்திய அணி களமிறங்கும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் துவக்க ஆட்டக்காரர்கள் கார்த்திக், முரளி விஜய் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள்.

÷அதேசமயம் கேப்டன் ரெய்னா,ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களின் ஆட்டம் டி20-யிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

÷அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான் ஆசிய கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், டி20 ஆட்டத்தில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.÷ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரையில் முத்தரப்புத் தொடரில் சிறப்பாக ஆடி அதிக புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இருப்பினும் இறுதிப்போட்டியில் இலங்கையிடம் தோற்றது.

÷முத்தரப்புத் தொடரை இழந்துள்ளதால், டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஜிம்பாப்வே களமிறங்கும். ஏற்கெனவே லீக் ஆட்டங்களில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளதால், கூடுதல் நம்பிக்கையுடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கும்.

÷அந்த அணியின் டெய்லர், மசகட்ஸô, கவென்ட்ரி,தைபு ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவது கூடுதல் பலம்.

÷இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.


அணி வீரர்கள் விவரம்:

இந்திய அணி: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), விராட் கோலி, முரளி விஜய், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், அபிமன்யூ மிதுன், அசோக் திண்டா, பங்கஜ் சிங், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா, பியூஷ் சாவ்லா,

ஜிம்பாப்வே: எல்டன் சிகும்புரா (கேப்டன்), ஆண்டி பிளிக்நாட், சமு சிபாபா, சார்லஸ் கவென்டரி, கிரீம் கிரீமர், கிரேக் இர்வின், கிரேக் லேம்ப், ஹாமில்டன் மசகட்ஸô, கிறிஸ் மோபு, ரே பிரைஸ், எட் ரெய்ன்ஸ்போர்டு, உசி சிபந்தா, தாதேண்டா தைபு, பிரண்டன் டெய்லர், உட்சேயா.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment