32 நாடுகள் மோதும் உலகக் கோப்பைப் போட்டியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றாலும் சில வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே காண்பதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு. கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசிக்கப் போகும் நட்சத்திர வீரர்களின் விவரம்:
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்)
போர்ச்சுக்கல் அணியின் மிகச்சிறந்த ஆட்டக்காரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தனது அபார ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தவர். தலையால் முட்டி கோலடிப்பதில் வல்லவர். புகழ்பெற்ற ரியல் மாட்ரிக் கிளப்புக்காகவும் விளையாடி வருகிறார்.2010 உலகக் கோப்பையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காகக் காத்திருக்கிறார்.
ராபின் வான் பெர்ஸி (ஹாலந்து)
ஹாலந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ராபின் வான். காயம் காரணமாக சில மாதங்கள் கால்பந்து விளையாடாமல் இருந்தார். ராபின் வானை மட்டுமே நம்பி ஹாலந்து அணி களம் இறங்குகிறது. வான் பெர்ஸியின் ஆட்டத்தால் ஹாலந்து அணிக்கு கோப்பை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கிளின்ட் டெம்ப்சி (அமெரிக்கா)
÷மத்திய கள ஆட்டத்தில் வல்லவரான கிளின்ட் டெம்ப்சி, கோலடிப்பதில் வல்லவர். முன்னணி கால்பந்து வீரர்களின் ஆட்டத்தை ஒத்திருப்பதால் கிளின்ட் டெம்ப்சிக்கு இந்தப் பெயர் கிடைத்துள்ளது.
கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றபோது ஒரு கோலை மட்டுமே கிளின்ட் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராங்க் ரிபெரி (பிரான்ஸ்)
2006 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிபெரியின் ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. பிரான்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறக் காரணமே இவர்தான். இந்த போட்டியிலும் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)
இந்த உலகக் கோப்பையில் அறிவிக்கப்படாத ஹீரோவாக இருப்பவர் மெஸ்ஸி. எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது இவர் ஆட்டம்தான். இவரது ஆட்டத்தால் ஆர்ஜென்டீனா அணி மீண்டும் ஒரு முறை கோப்பையைக் கைப்பற்றினால் கூட ஆச்சர்யம் இல்லை. ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவர் மெஸ்ஸி. இந்த உலகக் கோப்பையில் இவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் கூடியுள்ளனர் என்றால் அது மிகையல்ல.
மைகான் (பிரேசில்)
பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவர் மைகான். தடுப்பாட்டத்துடன் மின்னல் வேக அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தக் கூடியவர் மைகான். எதிரணி வளையத்துக்குள் நுழைந்து கோலடிப்பதில் அசகாய சூரர். இவரது அட்டகாசமான ஆட்டம் மீண்டும் பிரேசிலுக்கு கோப்பையைப் பெற்றுத் தருமா என்பதைப் பார்க்கவேண்டும்.
இகர் கசில்லாஸ் (ஸ்பெயின்)
÷ஸ்பெயினின் மிகச் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவர் இகர் கசில்லாஸ். 2008-ல் ஈரோ கோப்பைப் போட்டியை ஸ்பெயின் வெல்வதற்கு காரணமாக அமைந்தார் இகர். எதிரணி வீரர்கள் அடிக்கும் பந்துகளை கோலுக்குள் விழாமல் தடுப்பதில் சாமர்த்தியசாலி. இவரது கைகளை கோந்து கைகள் என்றே சொல்லலாம்.
÷பந்து இவரை மீறிச் செல்லாது என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
சாமுவேல் எட்டோ (காமரூன்)
÷காமரூன் அணியின் திறமையான வீரர்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் சாமுவேல் எட்டோ. மூன்று முறை ஆப்பிரிக்காவின் சிறந்த வீரராக தேர்வாகி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். 3-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்கிறார். தகுதிச் சுற்று ஆட்டங்களில் 9 கோல்களைப் போட்டுள்ளார்.
வேயன் ரூனி (இங்கிலாந்து)
÷இங் கிலாந்து கண்டெடுத்த கால்பந்து முத்துக்களில் முக்கியமான இடம் வேயன் ரூனிக்கு உண்டு. தனியொருவராக சாதிக்கும் அசாத்திய திறமை இவரிடம் குடிகொண்டிருக்கிறது. இவரது ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அபார ஆட்டத்தால் எதிரணி வீரர்களை மிரளச் செய்பவர்.
பெர்னாண்டோ டோரஸ் (ஸ்பெயின்)
÷ஸ்பெயின் அணியின் முக்கியமான ஆட்டக்காரர்களில் பெர்னாண்டோ டோரஸýக்கும் முக்கியமான இடம் உண்டு. களத்தில் இவர் புலியெனப் பாயும்போது மிரளாத எதிரணி வீரர்கள் இல்லை என்று சொல்லலாம்.
இ வரது அனல் பறக்கும் ஆட்டத்தால் ஏராளமான வெற்றிகளை ஸ்பெயின் குவித்திருக்கிறது. ஈரோ 2008 கோப்பையை ஸ்பெயின் வெல்ல முக்கியமான காரணமாக அமைந்தவர் டோரஸ்.
ஸ்டீவன் பியனார் (தென்னாப்பிரிக்கா)
÷போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவன்தான். எதிரணி வீரர்களை ஏமாற்றி பந்தைக் கடத்திச் சென்று கோலாக்குவதில் இவருக்கு நிகர் இவர்தான். இங்கிலாந்திலுள்ள கிளப்புக்காகவும் ஆடி வருகிறார்.
÷இவரது ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்லவேண்டும் என்று ரசிகர்கள் தவமிருக்கின்றனர்.
நன்றி : தினமணி
நன்றி : தினமணி









No comments:
Post a Comment