Pages

Thursday, June 10, 2010

டெண்டுல்கரின் பேட்டில் விளையாடுகிறார் பாகிஸ்தான் வீரர் உமர் அமின்

பாகிஸ்தான் அணியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் பேட்ஸ்மென் உமர் அமின், இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் பேட்டில் விளையாடவுள்ளதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் சிறப்பாக விளையாடியதற்காக ஷோயப் அக்தர், இவருக்கு சச்சின் டெண்டுல்கரின் இந்த பேட்டை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.


"போட்டியை வெல்லக்கூடிய ஒரு இன்னிங்சை ஆடியதற்காக எனக்கு அந்த பேட் பரிசாக அளிக்கப்பட்டது. அதனை நான் எனது பொக்கிஷமாகக் கருதுகிறேன், நான் பாகிஸ்தானுக்காக முதல் போட்டியில் விளையாடும்போது அந்த மட்டையில்தான் விளையாடவுவேன்." என்றார் உமர் அமின்.


20 வயதாகும் உமர் அமின், ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment