Pages

Friday, June 4, 2010

ஜிம்பாப்வேயிடம் இந்தியா மீண்டும் தோல்வி

இந்திய வீரர் யூசுப் பதானை அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ஜிம்பாப்வே வீரர்கள் தைபு, ரேமண்ட் பிரைஸ்.

ஹராரே (ஜிம்பாப்வே), ஜூன் 3: முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் ஹராரேவில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 38.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கம் முதலே ஜிம்பாப்வே பெüலர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி இந்தியாவின் ரன்விகிதத்தை கட்டுக்குள் வைத்தனர். இந்திய துவக்க ஜோடிகளின் ஆமைவேக ஆட்டத்தால் 15-வது ஓவரில் தான் இந்திய அணி 50 ரன்களை எட்டமுடிந்தது.

அணியின் ஸ்கோர் 58 ரன்களை எட்டியபோது தினேஷ் கார்த்திக் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். இதையடுத்து விராட் கோலி களம்புகுந்தார்.

கோலி-முரளி ஜோடி சிறிதுநேரமே நிலைத்தது. 56 பந்துகளைச் சந்தித்த முரளி விஜய்,ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடந்த இரு ஆட்டங்களில் சதம் கண்ட ரோஹித் சர்மா களமிறங்கினார்.

கடந்த ஆட்டத்தைப்போல் இந்த ஆட்டத்திலும் கோலி-ரோஹித் ஜோடி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோலி 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அவரைத்தொடர்ந்து கேப்டன் ரெய்னா, ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார்.

ரெய்னா 3 ரன்களிலும், ரோஹித் 13 ரன்களிலும் ரன்அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இதனால் இந்திய அணி 95 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

இதையடுத்து ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அணியின் ஸ்கோர் 127 ரன்களை எட்டியபோது பதான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மிஸ்ரா டக்அவுட் ஆனார்.இதையடுத்து ஜடேஜாவுடன், திண்டா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு சிறப்பாக விளையாடி தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய அணியை மீட்டது.

ரவீந்திர ஜடேஜா, அவ்வப்போது சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்த ஜோடியை லேம்ப் பிரித்தார். திண்டா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 49-வது ஓவரில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அவர் 72 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே தரப்பில் லேம்ப் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

195 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. மசகட்ஸô, டெய்லர் ஆகியோர் ஆட்டத்தை துவக்கினர். இந்த ஜோடி இந்திய பெüலர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. குறிப்பாக அசோக் திண்டாவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்தனர். 19.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்தது.

அணியின் ஸ்கோர் 128 ரன்களைக் கடந்தபோது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த டெய்லர் 74 ரன்களில் ஓஜா பந்தில், விஜயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 90 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து கவென்ட்ரி களம் புகுந்தார். அணியின் ஸ்கோர் 161 ரன்களை எட்டியபோது துவக்க ஆட்டக்காரர் மசகட்ஸô, ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 86 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து கவென்ட்ரியும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 38.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. சிகும்புரா 16 ரன்களுடனும், தைபு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

74 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய டெய்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்: இந்தியா- 194-9வி (ஜடேஜா 51, லேம்ப் 3வி-45), ஜிம்பாப்வே- 197-3வி (டெய்லர் 74, ஜடேஜா 2வி-27).

இன்னும் 2 லீக் ஆட்டங்கள் மீதமுள்ளன. 5-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையையும், 7-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி-ஜிம்பாப்வேயையும் எதிர்கொள்கிறது.

இலங்கையுடனான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தால் இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பு குறைந்துவிடும். அதனால் 5-ம்தேதி நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.


பைனல் வாய்ப்பு "அம்போ?'

முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை, இந்திய அணி கிட்டத்தட்ட இழந்து விட்டது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், ஒரு வெற்றி மட்டுமே பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது. ஜிம்பாப்வே (9 புள்ளி), இலங்கை (5 புள்ளி) அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

இந்திய அணி பைனலுக்கு முன்னேற வேண்டுமானால், இலங்கை அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் "போனஸ்' புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைய வேண்டும்.

ஒருவேளை ஜிம்பாப்வே அணியை, இலங்கை அணி வீழ்த்தும் பட்சத்தில், மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் பைனலுக்கு முன்னேறும் அணிகள் தீர்மானிக்கப்படும். தற்போது இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் மோசமாக இருப்பதால், பைனலுக்கு முன்னேறுவது கடினம் தான்.

புள்ளிப்பட்டியல்

ஜிம்பாப்வே அணி நேற்று 38.2 ஓவருக்குள் விரைவாக வெற்றி பெற்றதால் கூடுதலாக ஒரு போனஸ் புள்ளி கிடைத்தது. இதனால் 5 புள்ளிகள் பெற்ற ஜிம்பாப்வே அணி, மொத்தம் 9 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்

ஜிம்பாப்வே 3 2 1 9 +0.176
இலங்கை 2 1 1 5 +0.331
இந்தியா 3 1 2 4 --0.295
* ஒவ்வொரு வெற்றிக்கும் 4 புள்ளிகள் வழங்கப்படும்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment