
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் முறையாக ஒபாமாஇந்தியா வரவுள்ளார். இதனை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், 21 ம் நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் உலக வளர்ச்சிக்கு பங்காற்றுவதில் முக்கியப்பங்கு வகிப்பதாக இருக்கும் என்றும், இந்திய அமெரிக்க உறவு என்றும் நீடீத்திருக்கும் என்றும் வாஷிங்டனில் அதிபர் ஒபாமா கூறினார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று ஹிலாரி கிளிண்டனை சந்தித்து பேசினார். இன்று ( வெள்ளிக்கிழமை ) அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.
இருவரும் நாட்டின் வளர்ச்சி , பொருளாதாரம், அணு ஆயுத பரவல் சட்டம் தொடர்பான விஷயம் பயங்கரவாதம் ஒழிப்பில் இந்தியாவின் பங்கு உள்ளிட்டவை மற்றும் நட்புறவு குறித்து விவாதித்தனர். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா கூறுகையில் ; எனது தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தில் இந்தியாவின் நட்புறவுக்கு முழு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை எப்போது இருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஏனைய விஷயங்களை எதிர்கொள்ளும். இரு நாட்டு உறவுகள் மூலம் உலக அளவிலான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இந்தியாவுக்கு உலக அளவிலான சக்தியில் ஒரு பொறுப்பு உள்ளது.
இந்தியாவுக்கு வருமாறு பல முறை என்னிடம் அழைப்பு விடுக்கப்பட்டது. நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன். வரும் நவம்பர் மாதம் இந்தியா செல்ல முடிவு செய்திருக்கிறேன். பாரம்பரியமும், கலாச்சாரமும் உள்ள இந்தியாவுக்கு செல்வதில் பெருமையும். மகிழ்வும் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய எஸ்.எம்..கிருஷ்ணா கூறுகையில் இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவு கொண்ட நாடாக இருப்து உலக அளவில் முக்கியத்தும் பெறுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய எஸ்.எம்..கிருஷ்ணா கூறுகையில் இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவு கொண்ட நாடாக இருப்து உலக அளவில் முக்கியத்தும் பெறுகிறது என்றார்.
கடந்த 2009 ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவருக்கு ஒபாமா சிறப்பான வரவேற்பு அளித்தார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங் ஒபாமாவுக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை இரு நாடுகள் இடையிலான நட்பில் கூடுதல் சிறப்பு தரும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment