Pages

Saturday, June 5, 2010

தமிழ் ரசீது, 'பிரின்டர்' : 'எப்சன்' நிறுவனம் அறிமுகம்


சென்னை: செம்மொழி மாநாட்டை ஒட்டி, வர்த்தக நிறுவனங்களில் கையாள வசதியாக, தமிழில் ரசீதுகளை அச்சடிக்கும் பிரின்டரை, 'எப்சன்' நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. '

எப்சன்' நிறுவன சீனியர் பொது மேலாளர் சாம் பமூர்த்தி கூறியதாவது: ஜப்பான், 'எப்சன்' குழுமம், இந்திய, 'எப்சன்' குழுமம் ஆகியவை இணைந்து, எல் க்யூ - 50 என்ற, வர்த்தக நிறுவனங்களுக்கான ரசீது அச்சடிக்கும் பிரின்டரை தயார் செய்துள்ளது.

கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, உள்ளூர் சந்தையை கருத்தில் கொண்டு, எப்சன் எல்க்யூ - 50 என்ற ரசீது அச்சடிக்கும் பிரின்டரை அறிமுகம் செய்கிறோம். இந்த பிரின்டர், தமிழக வர்த்தக நிறுவனங் கள் கையாள வசதியாக, தமிழில் விலைப் பட்டியல் ரசீதை அச்சடித்து தரும்.

இதன் மூலம் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு கிடைக்கும். வர்த்தகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமான உறவு மேம்படும். இதன் விலை, 10 ஆயிரத்து 100 ரூபாய் மட்டுமே.

இவ்வாறு சாம்பமூர்த்தி கூறினார். அப்போது விற்பனை பொது மேலாளர் ராம்பிரசாத் உடன் இருந்தார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment