
சென்னை, ஜூன் 3: சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் படப்பிடிப்புக்கு முன்பு ஒத்திகை அவசியம். அது படத்தை திட்டமிட்டவாறு முடிக்க உதவும் என்றார் நடிகர் கமல்ஹாசன்.
துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. இதில் கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடிக்கிறார்.
த்ரிஷா, மாதவன், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். எழுத்தாளர் ஞானியின் மகன் மனுஷ் நந்தா ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாள் தினத்தில், இந்தப் படத்தின் தொடக்கவிழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் கமல்ஹாசன் பேசியது:
விழாவில் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஸ்டாலின், நடிகர் மாதவன், நடிகை த்ரிஷா, நடிகை சங்கீதா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தா உ
படத்தின் தயாரிப்பாளர் உதயநிதியின் பூர்விகத்தைப் பற்றி நான் நன்கு அறிந்தவன் என்றாலும், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அவரைப் பற்றி அதிகம் சொல்லியிருக்கிறார். இருவரும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
ஒரு படம் முடிந்த பிறகு படத்தின் தயாரிப்பாளரைப் பற்றி இயக்குநரும், இயக்குநரைப் பற்றி தயாரிப்பாளரும் பாராட்டிப் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதான ஒன்று. அது இங்கே நிகழ்ந்திருக்கிறது.
பட விஷயங்களில் தலையிடவே மாட்டார் என தயாரிப்பாளரைப் பற்றி இயக்குநர் கூறினார். அதற்கு அவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம். உதயநிதியும் அவருடைய மனைவியும் சினிமாவின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள்.
சினிமாத்துறையின் மீது அன்பு வைத்திருப்பவர்கள் மீது எனக்கும் அன்பு வந்துவிடும்.
இந்தப் படத்துக்காக படப்பிடிப்புக்கு முன்பே முறையாக பயிற்சிப் பட்டறை வைத்து அனைவருக்கும் பயிற்சி அளித்திருக்கிறோம். சுமார் 3 லட்சம் ரூபாயில் ஒரு நாடகம் நடத்துவதற்கே 30 தடவை ஒத்திகை பார்க்கிறோம். கோடிக்கணக்கில் செலவிட்டு படம் எடுக்கும்போது, படப்பிடிப்புக்கு முன்பு ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம்.
அப்போதுதான் படத்தை திட்டமிட்டபடி முடித்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித் தர முடியும். மேலும், நடிகர்களும் தங்களுடைய நடிப்பை மெருகேற்றிக்கொள்ளலாம்.
இந்தப் படத்தின் ஒத்திகையில் பொறுமையுடன் பங்கேற்று பயிற்சி பெற்ற குழந்தை நட்சத்திரங்கள் முதல் அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது... இது கமல்ஹாசனுடன் நான் இணையும் 5-வது படம். சினிமாவில் மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் அவரிடம் நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இந்தப் படத்தில் கமல், 30 வயது இளைஞன் தோற்றத்தோடு ஒரு ரொமான்டிக் ஹீரோவாக ஜொலிப்பார். படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு ஐரோப்பா, இத்தாலி, ஸ்பெயின், ரோம், ஜெனீவா, பிரான்ஸ், மலேஷியா போன்ற நாடுகளில் நடைபெறுகிறது. மன்மதன் அம்பு என்ற தலைப்பு இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்றார்.
நன்றி : தினமணி
No comments:
Post a Comment