Pages

Friday, September 10, 2010

:சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் : மும்பை இந்தியன்ஸ் - லயன்ஸ் அணி இன்று மோதல்

ஜோகனஸ்பர்க்:சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் இன்றைய முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.


உள்ளூர் "டுவென்டி-20' அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தென் ஆப்ரிக்காவில் துவங்குகிறது. ஜோகனஸ்பர்கில் நடக்கும் முதல் போட்டியில், சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (இந்தியா) அணி, அல்விரோ பீட்டர்சனின் ஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணியை எதிர்கொள்கிறது.


சச்சின் பலம்:


சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் 2 வது இடம் பிடித்து அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாதிக்க காத்திருக்கிறது. அணியின் முக்கிய பலமே மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தான். சூப்பர் பார்மில் இருக்கும் சச்சின், இன்றைய முதல் போட்டியிலேயே முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலார்டு மிரட்டல்: 

மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் போலார்டு. இவரது அதிரடி மும்பை அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அம்பாதி ராயுடு, சவுரவ் திவாரி, டுவைன் பிராவோ, டுமினி தவான், சதீஷ் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் படை, ஹைவெல்ட் லயன்சை மிரட்டுகிறது.

மீண்டும் ஜாகிர்: 

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் பந்து வீச்சில் சாதிக்க காத்திருக்கிறார் ஜாகிர் கான். இவருக்கு "யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்' மலிங்கா கைகொடுக்க உள்ளார். மலிங்காவின் மிரட்டல் வேகத்தின் முன், லயன்ஸ் அணி தப்புவது சிரமம் தான்.

வேகப் பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் தென் ஆப்ரிக்க மண்ணில், ஹர்பஜன் சுழல் ஜாலம், மும்பை அணிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நட்சத்திரங்கள் இல்லை:நட்சத்திர வீரர்கள் அணி வகுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முன், பரிதாபமாக காட்சி அளிக்கிறது ஹைவெல்ட் லயன்ஸ் அணி. இந்த அணியின் கேப்டன் அல்விரோ பீட்டர்சன், நீல் மெக்கன்சி, வான் ஜார்ஸ்வெல்டு தவிர மற்ற வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை. இருப்பினும் சொந்த மண்ணில் தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது லயன்ஸ் அணி. 

இந்த அணியின் முக்கிய வீரராக ஜான்டர் பிரையன் உள்ளார். ஆல்-ரவுண்டரான இவர், தென் ஆப்ரிக்காவில் நடந்த உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்தியவர். இன்றைய போட்டியில், லயன்ஸ் அணிக்கு இவர் கைகொடுக்கலாம். அலெக்சாண்டர், ஈதன் ரீலி ஆகியோர் வேகத்தில் அசத்த காத்திருக்கின்றனர்.


அணி வீரர்கள் வருமாறு :

மும்பை இந்தியன்ஸ்: 

சச்சின் (கேப்டன்), ஜாகிர் கான், ஹர்பஜன், சவுரவ் திவாரி, அம்பாதி ராயுடு, சிகர் தவான், சதீஷ், டாரே, போலார்டு, பிராவோ, டுமினி, மலிங்கா, மெக்லாரன், அலி மொர்டசா மற்றும் குல்கர்னி,

ஹைவெல்ட் லயன்ஸ்: 

அல்விரோ பீட்டசர்ன் (கேப்டன்), நீல் மெக்கன்சி, ஜான்டர் பிரையன், அலெக்சாண்டர், ஷேன் பர்கர், ரிச்சர்ட் கேமரான், வெர்னர் கோட்சி, கிளிப் டெகான், ராபர்ட் பிரைலிங்க், ஈதன் ரீலி, தமி சோல்கிலி, ஜோனதான் மற்றும் வான் ஜார்ஸ்வெல்டு.

போட்டியை ஸ்டார் கிரிக்கெட்(Star Cricket) சேனல் நேரடியாக இரவு 8 .00 ஒளிபரப்புகிறது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment