Pages

Friday, September 10, 2010

அர்ப்பணிப்புடன் விளையாடுகிறேன்: சச்சின்

ஜோகனஸ்பர்க்:"கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த நாள் முதல், இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வருகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின். இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ள இவர், கோப்பை வெல்ல காத்திருக்கிறார்.


கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த நாள் முதலாக, இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறேன். நான் கிரிக்கெட்டை மதிக்கிறேன். எங்கே சென்று விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. தரமான போட்டிகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்று திறமை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். அதை விட இந்தியாவுக்காக விளையாடுவது தனிச் சிறப்பு. மும்பையும், இந்தியாவும் இணையும் போது, மும்பை இந்தியன்ஸ் உருவாகிறது. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment