நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்தின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை ஜெயலலிதா.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தவர் ஜெயலலிதா. அன்றைக்கு அவர் தமிழக முதல்வராக இருந்தார். ஆனால் அந்த திருமண வரவேற்பில் கருணாநிதியும் பங்கேற்று வாழ்த்தினார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த தனது இளைய மகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு குடும்பத்துடன் ரஜினியே நேரில் போய் ஜெயலலிதாவை அழைத்தார்.
ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை. ஆனால் ரஜினி நேரில் அழைக்காத போதும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் வந்திருந்து வாழ்த்தினர்.
அடுத்து திருமணத்துக்கு வருமாறு ரஜினியும் அவர் மனைவி லதாவும் சில தினங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீட்டுக்குப் போய் அழைப்பிதழ் வைத்தனர். இதனை தனி செய்திக் குறிப்பாக அதிமுக அலுவலகம் பத்திரிகைகளுக்குக் கொடுத்தது.
ஆனால் மாப்பிள்ளை அழைப்பு, முகூர்த்தம், வரவேற்பு என எந்த நிகழ்விலும் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. இந்த நேரமாகப் பார்த்து கொடநாட்டுக்குப் போய்விட்டார்.
ரஜினி நேரில் போய் அழைத்த பெரும்பாலான அரசியல், சினிமா மற்றும் தொழில்துறைப் பிரபலங்கள் திருமணத்துக்கு வந்திருந்து வாழ்த்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியாவுடன் வந்து வாழ்த்தினார்.
No comments:
Post a Comment