கலைத்துறையில் ஒரு குடும்பத்தின் விழுதுகள் வேர் விட்டு, ஊன்றி வெற்றிகரமாக ஜெயிப்பது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. தொழிலும் கலையும் ஜெயிக்க வேண்டுமானால், மக்களைத் திருப்தி செய்யவேண்டும்.
அரசியலில் வேண்டுமானால் கூட்டணி கோல்மால்கள் உதவலாம். கலையும் தொழிலும் உண்மையானதாக இருந்தாலன்றி ஜெயிப்பது கடினம். அதை விமர்சிப்பது, பொறாமை, காழ்ப்புணர்ச்சியைததான் காட்டும்.
முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான். அரசியல் பலம் அதிகாரம் மட்டும் சன் குடும்பத்தை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அதற்கு பின்னால் கலாநிதி மாறன் இருக்கிறார்.
அதே அதிகார பலத்தில்தானே சுதாகரன், தினகரன், மகாதேவன் என மன்னார்குடி கும்பல்கள் இருந்தன. ஏன் அவர்களால் இந்த உயரத்தை எட்ட முடியவில்லை. அதிகாரபலம் உள்ளே நுழைவதை எளிதாக்கலாம். ஆனால் அத்துறையில் வெற்றிபெற அவை கை கொடுக்காது.
இன்றைய சினிமாவில் அவர்கள் படம் எடுக்றங்க. அத ரிலீஸ் பண்றாங்க. 95% அவங்க படம் தான் ஹிட் ஆகுது.
இது சினிமா மேல உள்ள ஆர்வம் தான் தவிர அதிகாரம் இல்லை. இது நம் கவலை பட வேண்டிய விஷயம் இல்லை.தமிழ் சினிமா இப்போது தான் அதன் வளர்ச்சி பாதையில் செல்கிறது.
டிஸ்கி
சினிமா இல்லை என்றால் ஞானிக்கு வேலை இல்லை.
No comments:
Post a Comment