Pages

Wednesday, September 22, 2010

கைமாறிய அஜீத் கதைக்கு சூர்யா ஹீரோ

அஜீத் பல படங்களை நடிக்க மறுப்பு தெரிவிக்க, அந்த படங்கள் அனைத்தும் சூர்யாவிடம் கைமாறியது. மேலும் ந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சூர்யாவின் காக்க.. காக்க, கஜினி, மற்றும் ஆர்யாவின் நான் கடவுள் என பல படங்கள் அஜீத்திற்காக எழுதப்பட்ட கதைகள்.


எல்லா இயக்குநர்களின் செல்ல ஹீரோவாக மாறி வரும் சூர்யாவிற்கு தற்போது அஜீத் கைவிடப்பட்ட படத்திற்கு ஹீரோவாக நடிக்கிறார் என கோலிவுட் பக்கம் ஒரு பேச்சு நிலவுகிறது. 

 கௌதம் மேனனின் 'துப்பறியும் ஆனந்த்'. துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். அஜீத்துக்காக கெளதம் மேனன் தயார் செய்த கதைதான் துப்பறியும் ஆனந்த். இதில் அஜீத் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக படம் கைவிடப்பட்டது. 

சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்சன் நடிப்பார் என தெரிகிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் அமைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment