ஆர்யா, மாதவன் இணைந்து நடிக்க, 'வேட்டை' எனும் படத்தை இயக்குகிறார் லிங்குசாமி.
'பையா' படத்தைத் தொடர்ந்து, சிம்பு படத்தை இயக்கவுள்ளதாக லிங்குசாமி அறிவித்திருந்தார். புரிதல்களில் சில பல சிக்கல்கள் ஏற்பட்டதால், அந்த புராஜக்ட் கைவிடப்பட்டது.
பின்னர், விஜய் நடிப்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படத்தை அவர் இயக்கப் போவதாகவும் பேச்சு நிலவியது.
இந்நிலையில், ஆர்யா - மாதவன் கூட்டணியில் உருவாகும் 'வேட்டை' எனும் படத்தை லிங்குசாமி இயக்குவது இறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார்.
இப்படத்தில் மாதவனும் ஆர்யாவும் சகோதரர்கள். முதன் முதலாக போலீஸ் கதாப்பாத்திரம், மாதவனுக்கு.
'பையா'வைத் தொடர்ந்து இதிலும் தமன்னாவே நாயகி. மற்றொரு நாயகி கதாப்பாத்திரத்துக்கு இந்தி நடிகை வித்யா பாலனுடன் பேச்சு நடக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு, நிரவ் ஷா.
'வேட்டை'யின் ஸ்பெஷாலிட்டி குறித்து கேட்டால், "மாதவனுக்கு 'ரன்', கார்த்திக்கு 'பையா' போல ஆர்யாவுக்கு இந்த 'வேட்டை' அமையும்," என்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
No comments:
Post a Comment