Pages

Friday, September 24, 2010

ரஜினிகாந்த் திரைப்பட விழா!

திரையுலகத்தில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக... அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி... 


தமிழ் திரையுலகின் பல சாதனைகளையும் தன் வசம் வைத்திருக்கும் ரஜினிகாந்த்-திற்கு பிரபல திரையரங்குகளில் ஒன்றான, ஏஜிஎஸ் சினிமா மல்டிப்ளக்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் திரைப்பட விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ரஜினியின் புகழைப் பறை சாற்றும் வகையில், கெளரவிக்கும் வகையில், ஏஜிஎஸ் சினிமா (சென்னை அண்ணா நகர் அருகே புதிதாக உருவாகியுள்ள மல்டிபிளக்ஸ் திரை வளாகம்) ரஜினிகாந்த் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடுசெய்துள்ளது. 

செப்டம்பர் 24ம்தேதி இந்த திரை விருந்து தொடங்குகிறது. இந்த விழாவி்ல் வெள்ளிக்கிழமை அண்ணாமலை, சனிக்கிழமை மன்னன், ஞாயிற்றுக்கிழமை தளபதி, திங்கள்கிழமை குரு சிஷ்யன், செவ்வாய்க்கிழமை முரட்டுக்காளை, புதன்கிழமை முத்து, வியாழக்கிழமை சந்திரமுகி ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படுகின்றன.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment