Pages

Thursday, September 23, 2010

பூமிக்கு அருகில் ஜூபிடர்

புதுடெல்லி: ஜூபிடர் (வியாழன் கோள்) பூமிக்கு அருகில் வந்திருக்கிறது. அது பூமியில் இருந்து 368 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. கடந்த 1963-ம் ஆண்டிற்குப் பின் இப்பொழுது தான் பூமிக்கு அருகில் வந்திருக்கிறது. இதை மாலை நேரத்தில் காணலாம். நள்ளிரவில் உச்சி வானில் அது தெரியும்.


அதேபோல யுரேனஸும் பூமிக்கு வெகு அருகில் வந்துள்ளது. இரண்டையும் மிகப் பிரகாசமான தோற்றத்தில் இன்று இரவு பார்க்க முடியும்.
வானுலக அதிசயம் குறித்த ஆர்வலர்களுக்கு இன்று இரவு இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த 2 கிரகங்களும் டிஸ்க் வடிவத்தில் பிரகாசமாக காணப்படுவதை அவர்கள் கண்டு களிக்கலாம்.

இது குறித்து சயின்ஸ் பாபுலரய்சேஷன் அசோசியேஷன் ஆப் கம்யூனிகேட்டர்ஸ் அன்ட் எஜுகேடர்ஸ் அமைப்பின் சந்திரபூஷன் தேவ்கன் கூறியதாவது, சூரியன் மறைந்த பிறகு கிரகங்களிலேயே மிகப் பெரிய கிரகமான ஜூபிடர் வடக்கில் மிகவும் பிரகாசமாகத் தெரியும்.

பைனாகுலர் அல்லது தொலைநோக்கி மூலம் நன்றாகப் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்கலாம். இது இன்னும் சில மாதங்களுக்கு காணப்படும்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment