Pages

Monday, September 20, 2010

ஆஸி. தொடர்: இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியிலிருந்து யுவ்ராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செடேஸ்வர் புஜாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மேலும் அணிக்கு ஸ்ரீசாந்த், ஹர்பஜன், மிஷ்ரா, ஜாகீர் கான் ஆகியோர் திரும்பியுள்ளனர்.

காயம் காரணமாக இலங்கைத் தொடரிலிருந்து விலகிய துவக்க வீரர் கவுதம் கம்பீரும் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் எடுத்து சாதனை புரிந்த ரெய்னாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முரளி விஜய், பிராக்யன் ஓஜாவும் அணியில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள செடேஸ்வர் புஜாரா 22 வயது நிரம்பிய சௌராஷ்டிரா அணியைச் சேர்ந்த வலது கை நடுக்கள வீரர். இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தன் சொந்த எண்ணிக்கையாக ஒருமுறை 302 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உள்நாட்டு கிரிக்கெட் சராசரி 60.38 என்பது குறிப்பிடத்தக்கது.

புஜாரா

இந்திய அணி வருமாறு:


சேவாக், கம்பீர், திராவிட், சச்சின், லஷ்மண், ரெய்னா, புஜாரா, தோனி, ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் சிங், மிஷ்ரா, ஓஜா, விஜய், ஸ்ரீசாந்த்.

ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகை

டெஸ்ட் மற்றும் 3 ஒருதினப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இன்று டெல்லி வந்துசேர்ந்தனர்.

மொஹாலியில் அக்டோபர் 1-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. தில்லி வந்த ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியினர் மொஹாலிக்கு இன்று மாலை புறப்படுகின்றனர்.

மொஹாலியில் பிரசிடெண்ட் லெவன் அணியுடன் செப்டம்பர் 25-ம் தேதி முதல் 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டிகள் மொஹாலியிலும், பெங்களூரிலும் நடைபெற உள்ளன. அதைத்தொடர்ந்து அக்டோபர் 17-ம் தேதி முதல் கொச்சி, விசாகப்பட்டினம், கோவா ஆகிய நகரங்களில் ஒருதினப் போட்டிகள் நடைபெறுகின்றன.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment